மாகாண கபடிப் போட்டி

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாகாண கபடிப் போட்டி

மாகாண கபடிப் போட்டி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கபடி போட்டிகள் இரு தினங்கள் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 17 வயதிற்கு கீழ்ப்பட்ட 14 பெண் அணிகள் பங்கேற்றன. 17 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் 19 அணிகள் போட்டியிட்டன. 20 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் 17 அணியும், 20 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்கள் அணி 11 போட்டியிட்டன. இப்போட்டிகளில் 17 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்கள் கபடி போட்டியில் இறுதிப் போட்டியில் திருகோணமலை தந்ததால் மத்திய மகாவித்தியாலயமும், மட்டக்களப்பு கோரைக்கல்லிமடு மகாவித்தியாலயமும் போட்டியிட்டன. இதில் 34 இற்கு 17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் திருகோணமலை கந்தலாவ மகாவித்தியாலயம் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

20 வயதிற்கு கீழ் பட்ட பெண்கள் கபடி போட்டியில் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயமும், மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரியும் போட்டியிட்டன. இதில் மட்டக்களப்பு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம் 31 இற்கு 29 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மாகாண கபடிப் போட்டி

17 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் இறுதி கபடி போட்டியில் நிந்தவூர் அல் - மதீனா மகாவித்தியாலயமும், திருகோணமலை கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலயமும் போட்டியிட்டன. இப்போட்டியில் நிந்தவூர் அல் - மதீனா மகாவித்தியாலயம் 54 இற்கு 14 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

20 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் கபடிப் போட்டியில் நிந்தவூர் அல் - மதீனா மகாவித்தியாலயமும், நிந்தவூர் அல் - அஸ்ரக் மத்திய மகாவித்தியாலயமும் போட்டியிட்டன. 17 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் பெண்கள் பிரிவில் 14 பாடசாலைகளின் அணிகளும், ஆண்கள் பிரிவில் 19 பாடசாலை அணிகளுமாக 33 பாடசாலை அணிகள் பங்கு கொன்டன.

20 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவில் 11 பாடசாலை அணிகளும், ஆண்கள் பிரிவில் 17 பாடசாலை அணிகளுமாக 28 பாடசாலை அணிகள் 20 வயதிற்கு கீழ்ப்பட்ட கபடி போட்டிகளில் விளையாடின.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் கபடிப் போட்டியில் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலை மற்றும் நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலயம் ஆகியன போட்டியிட்டன. இப்போட்டியில் நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலயம் 39இற்கு 24 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலயம் 17 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவிலும், 20 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவிலும் கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாண கபடிப் போட்டி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)