
posted 2nd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வெடுக்குநாறிக்கு சிவபூமியால் 7இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (31) யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலே அவர் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு முன்தினம் வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள் வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)