
posted 20th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யூரியா உர விநியோகம்
காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலைய பிரிவிலுள்ள நெல் விவசாயக் கண்டங்களில் எதிர்வரும் சிறுபோக (2023 யல) நெற்செய்கை மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகளுக்கு எதிர்வரும் வாரம் முதல் முக்கிய உரமான யூரியா உரம் விநியோகிக்கப்படவிருக்கின்றது.
காரைதீவு கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சிதம்பரநாதன் இந்த உர விநியேலாகத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதன்படி வெளிச்சந்தைகளில் கூடிய விலை கொடுத்து விவசாயிகள் யூரியா உரத்தைப் பெற வேண்டியுள்ள நிலைமையை தவிர்க்கும் வண்ணம் 50 கிலோ கொண்ட ஒரு அந்தர் யூரியா உரத்தை பத்தாயிரம் ரூபா விலையில் வழங்க உள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிதம்பரநாதன் தெரிவித்தார்.
மேலும், ஒரு ஏக்கருக்கு 63 கிலோ வீதம் மேற்படி யூரியா உரம் வழங்கப்படவிருப்பதாகவும் விநியோகத்திற்கான தயார் நிலையில் தாமுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)