
posted 4th April 2023

இக் குழந்தையின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சோக சம்பவம்
இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும் நிலையில் இரு பிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு வழமைபோன்று சென்றுள்ளனர்.
அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளை வெளியே சென்றுள்ளது.
வெளியேறிய பிள்ளை அருகில் இருந்த வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் வீழ்ந்துள்ளது.
சில நிமிடங்களில் பிள்ளையைக் காணாத தாயும் உறவினர்களும் தேடியபோது மலசலகூட குழியில் இருந்து பிள்ளையை எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அது உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)