பதவிகள் தேவையா?

அரசை மக்கள் நிராகரிக்கின்ற இவ்வேளையில் ஒன்றும் செய்ய முடியாத இராஜாங்க அமைச்சு பதவிகளும். பட்டங்களும் தேவையா? என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையினர் பொருளாதாரத் தடைக்கு உட்படுத்தப்பட்டு, அகதிகளாக்கப்பட்டு, இடம் பெயர்ந்து உள் நாட்டுக்குள்ளேயே அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் உட்பட மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று கையேந்திய நிலை கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழர்களுக்கு ஏற்பட்டது.
தமிழர்கள் மட்டும் அகதிகளாக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை அரசு ஏற்படுத்தி இன்று நாடு பூராகவும் மூவின மக்களையும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வரிசையில் நின்று கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

நாட்டிலுள்ள மூவின மக்களும் அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களையும் வரிசையில் நின்று மணித்தியாலக் கணக்கிலும், நாள் கணக்கிலும்,வாரக்கணக்கிலும் மண்ணெண்ணை,பெற்றோல்,எரிவாயு தொடக்கம் உணவுப் பொருட்கள் வரை பெறுவதற்கு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் உணவு பொதிகளுக்கு கூட வரிசையில் நிற்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றன.

நிதி விடயத்திலும் மூடைகளில் பணத்தைக்கட்டிக் கொண்டு அரிசி வாங்க வேண்டிய நிலைக்கு பணவீக்கம் ஏற்படப் போகின்றதா? வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதரத்தடை முழு இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்வதா? மரணிப்பதா? என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு,குடிப்பதற்கான குடிநீரையும் வரிசையில் நின்று பெற வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் மக்கள் பிரதிநிதிகள் இம்மக்களின் துயர்களைத் துடைப்பதற்கு எந்தத் திட்டங்களையும் முன் வைக்காமல் பார்வையாளர்களாக இருந்து கொண்டு இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பசி பட்டினியில் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

மக்கள் துன்பப்படும் போது மக்களின் துன்பங்களை, துயரங்களை தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. என அவர் தெரிவித்துள்ளார்.

பதவிகள் தேவையா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY