
posted 30th April 2022
இலங்கையின் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் விதைப்பு வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த மாவட்டத்தில் இம்முறை விவசாயத்திற்கென நீர் வழங்கும் அம்பாறை சேனனாயக்க சமுத்திரத்தின் நீர் முகாமைத்துவ திட்டத்திற்கு அமைய, 68 ஆயிரம் ஹெக்டயர் காணியில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
இரசாயனப் பசளையைத் தடைசெய்த இலங்கை அரசின் பிழையான முடிவு காரணமாக கடந்த பெரும்போக நெற் செய்கையின் உற்பத்தி அறுவடை பெரும் வீழ்ச்சி கண்டிருந்தது.
எனினும் நெல்லுக்கு ஏற்பட்ட கிராக்கியும், திடீர் விலை உயர்வும் காரணமாக பாரிய நஷ்டத்திலிருந்து விவசாயிகள் ஓரளவு நிவர்த்தி நிலையை அடைய முடிந்தது. இந்நிலையில் இரசாயன உரத்தைத் தடைசெய்த விவகாரம் தமது பிழையான முடிவு என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் தனது நாட்டு மக்களுக்கான உரை ஒன்றின் போது ஏற்றுக்கொண்டிருந்தார்.
எனவே, செய்கை ஆரம்பித்துள்ள சிறுபோக நெற்செய்கைக்கு இன்னும் தாமதமின்றி இரசாயன உரம், கிருமி நாசினிகளை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்க ஆவன செய்யப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிச்ந்தையில் விவசாயச் செய்கைக்கு முக்கியமான யூரியா இரசாயன உரம், ஒரு அந்தர் நாற்பதாயிரம் ரூபாவுக்கு மேல் விற்பனையாவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விலையில் உரம் வாங்கி செய்கையில் நஷ்டத்தையே எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும், விவசாயிகள் அச்சம் தெரிவிப்பதுடன், நியாய மானிய விலையில் இரசாயன உரத்தை தாமதமின்றி வழங்க அரசு முன்வர வேண்டுமெனவும் விவசாயிகள் கோருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY