வன்முறைக்கும், கொலை அச்சுறுத்தலுக்கும் கனடாவிலிருந்து கயர் (hire) பண்ணப்பட்ட யாழ் கும்பல்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு, வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள்ளதுடன், வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன் , வீட்டில் இருந்த உடைமைகளையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளது.

வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்த பின்னர் அவர்கள் அடையாளம் காணப்பட முன்பு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வீட்டின் உரிமையாளருடன் கனடாவில் உள்ள நபர் ஒருவர் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், அவரது தூண்டுதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வன்முறைக்கும், கொலை அச்சுறுத்தலுக்கும் கனடாவிலிருந்து கயர் (hire) பண்ணப்பட்ட யாழ் கும்பல்

எஸ் தில்லைநாதன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY