
posted 31st May 2022
9 வயதான பாத்திமா ஆயிஷாவை கொன்றது தானே என்று மூன்று பிள்ளைகளின் தந்தையான 29 வயது நபர் குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
களுத்துறை - பண்டாரகமை - அட்டுலுகமையை சேர்ந்த பாத்திமா ஆயஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயிருந்தார். இந்நிலையில், மறுநாள் சதுப்பு நிலப் பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் மரண பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கடிக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறுமி கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், 29 வயதான குடும்பஸ்தர் சிறுமியை தானே கொன்றதாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், சிறுமி கொலைக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. இந்நிலையில், சந்தேகநபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY