
posted 10th April 2022
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 76 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 956 கிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எஸ் தில்லைநாதன்