6.7.2022 அன்று நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 கிராம அலுவலகர் பிரிவுக்கு எரிபொருள் வினியோகம்

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒன்பது கிராம அலுவலகப் பிரிவுகளுக்கு முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் புதன்கிழமை (06.07.2022) பெற்றோல் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

கீழ்வரும் கிராம அலுவலகர் பிரிவுகளைச் சார்ந்த வாகனம் வைத்திருந்து பிரதேச செயலகத்தில் எரிபொளுக்கான அட்டை பெற்றிருப்பவர்கள் குறிப்பிட்ட நாளான புதன்கிழமை (06.07.2022) அன்று குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்று அவர்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.

தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பச் செல்லும்போது பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் பதிவு செய்யப்படும் அட்டையையும் தங்கள் வசம் எடுத்துச் செல்லப்பட வேண்டுன் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • வங்காலை கிழக்கு காலை 8 மணி தொடக்கம் 11.30 மணிவரை
  • தோமஸ்புரி காலை 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை
  • நறுவிலிக்குளம் பிற்பகல் 1 மணியிலிருந்து 2.30 மணி வரை
  • வஞ்சியன்குளம் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 3.30 மணி வரை
  • உமனகரி பிற்பகல் 3.30 லிருந்து 4.30 மணி வரை
  • அச்சங்குளம் பிற்பகல் 4.30 லிருந்து 5.30 மணி வரை
  • இராசமடு பிற்பகல் 5.30 மணியிலிருந்து 7 மணி வரை
  • இலந்தைமோட்டை பிற்பகல் 7 மணியிலிருந்து 7.30 மணி வரை
  • செட்டியார் கட்டையடம்பன் 7.30 மணியிலிருந்து 8.15 மணி வரை

தங்களுக்கான பெற்றோல் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமாருக்கும் முருங்கன் எரிபொருள் நிலைய பொது மகாமையாளர் இம்மானுவேல் பிரான்சிஸ் சேவியருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

6.7.2022 அன்று நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 கிராம அலுவலகர் பிரிவுக்கு எரிபொருள் வினியோகம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More