38 வது நாள் செயல்முனைவின் விழிப்புணர்வு போராட்டம் பொத்துவில்

தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது சாத்வீகமாகன ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவின் விழப்புணர்வு போராட்டம் ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்து புதன்கிழமை (07.09.2022) 38 வது நாளை எட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் நடைபெறும் நூறு நாட்கள் இச் செயல் முனைவானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் (போரம்) மற்றும் 'மெசிடோ' நிறுவனங்களின் ஏற்பாட்டில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர்க் ஏத்தம் பகுதியில் புதன்கிழமை (07.09.2022) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 38ம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர்க் ஏத்தம் பகுதியில் புதன்கிழமை (07) இடம்பெற்றது.

இப் போராட்டமானது அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும். நடமாடுவது எங்கள் உரிமை. பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை. ஒன்று கூடுவது எங்கள் உரிமையென கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

38 வது நாள் செயல்முனைவின் விழிப்புணர்வு போராட்டம் பொத்துவில்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More