237 பில்லியன் ரூபா நிதி கல்விக்காக ஒதுக்கீடு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

237 பில்லியன் ரூபா நிதி கல்விக்காக ஒதுக்கீடு

2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும், மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த அனைத்து நிதிகளையும் ஒன்று சேர்த்தே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் முழுமையான தொகையைக் கணக்கிட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,

“நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய தவணைக்காக இந்த வருடம், மார்ச் மாதம் பாடசாலைகளை கால தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தாமதங்களைக் குறைத்து 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும். அதன்படி, அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக 2025ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும்.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யகப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன். நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, தற்போது தாமதமாக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் கட்டம் கட்டமாக நடத்துவதன் மூலம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டாகும் போது குறித்த வருடத்திற்குரிய பரீட்சைகளை அதேவருடத்தில் நடத்தி முடிக்க அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடத்தி முடிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. கல்வி நிர்வாக சேவையில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவாக நேர்முகத் தேர்வுகளை நடத்தி அவர்களுக்கான நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட கல்வி சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் அடுத்த வருடம் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நிரப்புவதற்கு அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

2024ஆம் ஆண்டுக்காக கல்வி அமைச்சின் கீழ் 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை இவ்வளவுதான் என்று தவறாக நினைக்க வேண்டாம். இதனுடன் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் சம்பளம், முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அனைத்து நிதிகளையும் ஒன்று சேர்த்தே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் முழுமையான தொகையை கணக்கிட வேண்டும்.

அதேபோன்று, கல்வி மறுசீரமைப்புக்கான கொள்கை கட்டமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் மாறும்போது தேசிய கல்விக் கொள்கை மாறக் கூடாது.

2024ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன. சில பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி 60 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 80 சதவீத பாடசாலை சீருடைகள் இலவசமாக எமக்கு கிடைக்கவுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதே எமது இலக்காகும். உலக உணவு வேலைத்திட்டம், USAID மற்றும் தனியார் துறையினரும் இதற்காக வழங்கும் ஆதரவை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த வேலைத் திட்டத்திடத்திற்காக ஒரு நிதியத்தை ஆரம்பிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை ஆகியவற்றுக்குப் பிறகு மாணவர்களுக்கு ஆங்கில மொழி, திறன் விருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பயிற்சிகளை வழங்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளது” என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

237 பில்லியன் ரூபா நிதி கல்விக்காக ஒதுக்கீடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)