
posted 17th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த ஜஸ்ரின் ஜனனி
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள பெற்று சித்தியடைந்துள்ளார்.
2000 ஆண்டிற்கு பின்னர் அதாவது 23 வருடங்களின் பின்னர் இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாடசாலைக்கு தனது ஒழுங்கான வரவு, அதிபர் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடாமுயற்சியே தனது வெற்றிக்கு காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப்பதோடு பெற்றோர்களும் அதில் கரிசனையெடுக்குமாறும் குறித்த மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களில் மாணவன் ஒருவன் 144 புள்ளிகளை பெற்றதோடு ஏனைய இருவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)