20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

பாவனையாளர்கள் சட்டதிற்கு மாறாக செயல்பட்ட 20 வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல்.

மன்னாரில் சில வர்த்தகர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விலைமாற்றங்கள் செய்தமை, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்துறை, நானாட்டான், மன்னார் நகர், அடம்பன் ஆகிய பகுதிகளிலுள்ள இருபது வர்த்தக நிலையங்களில் சட்டதிற்கு மாறாக செயல்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டன. இச்செயல்பாடுகளைச் சாட்சியாக வைத்து புதன்கிழமை (26.01.2022) அன்று இருபது வர்த்தகர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த 18 வர்த்தகர்களுக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார், தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு 3000 தொடக்கம் 7000 ரூபா வரை அபராதம் விதித்துத் தீர்ப்பழித்தார்.

20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House