20 வயது  காற்பந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சாதனை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

20 வயது காற்பந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சாதனை

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம் நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும் ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 : 03 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அகில இலங்கை 20 வயதுப் பிரிவில் சம்பியனானது.

2022 , 2023 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவில் காற்பந்தாட்டத்தில் சம்பியனான ஒரே பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி என்பது குறிப்பிடத் தக்கது.

இவ் அணி தனது முதலாவது போட்டியில் அனுராதபுரம் நச்சடுவா முஸ்லீம் மகா வித்தியாலயத்தை 07:00 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் கடயமோட்டை முஸ்லீம் மத்திய கல்லூரியை 03 : 01 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பலம் பொருந்திய மட்டக்களப்பு ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலையை 02 : 00 என்ற கோல் அடிப்படையிலும், அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் கொழும்பு ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு (Penalty) உதைமூலம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வயதுப் பிரிவினர் 2018 ஆம் ஆண்டில் 16 வயதுப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் காற்பந்தாட்டத்தில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த அணி என்பதும் குறிப்பித்தக்கது.

20 வயது  காற்பந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சாதனை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More