138 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ஓமந்தையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 138 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவுடன் கூலர் வாகனம் ஒன்று பயணிப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த லொறியிலிருந்து 138 கிலோ 581 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 46 மற்றும் 28 வயதுகளையுடைய வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 15 பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

138 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House