13 சுகாதார சேவைகள் அமைப்புக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில்

இலங்கை நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பொது மக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார சேவைகள் அமைப்புக்களின் 13 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து செவ்வாய் கிழமை (05.04.2022) நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக அவசரகால சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், மருத்துவ பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், சுகாதார சேவைகளுக்கு அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டம், நாடு பூராகவும் மேற்கொள்ளும் இதேவேளையில் இத் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ. டபிள்யூ. விமலரட்ண அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக வட மாகாணம் பூராகவும் உட்பட மன்னாரிலும் இப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் எனவும், ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்போடு தற்பொழுது அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு போராட்டமாகவும் இப் போராட்டம் அமைந்துள்ளது என வட மாகாண மற்றும் மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.எம். இல்ஹாம் இவ்வாறு தெரிவித்தார்.

13 சுகாதார சேவைகள் அமைப்புக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More