
posted 26th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
1,500 குடும்பங்கள் யாழில் இன்னமும் அகதி வாழ்வு
போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1512 குடும்பங்கள் அகதி நிலையிலேயே வாழ்கின்றனர் என்று யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடமின்றி, 1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் இருக்கின்றனர். இவர்களில் 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் 1,502 குடும்பங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. இவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)