பணம் கறந்த கமக்கார அமைப்புக்கு வைத்த ஆப்பு

பணம் கறந்த கமக்கார அமைப்புக்கு வைத்த ஆப்பு

கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் கமக்கார அமைப்பினால் சட்டவிரோதமான முறையில் விவசாயிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் கமக்கார அமைப்பினால் எந்தவித பயிர்ச் செய்கை கூட்டங்களும் நடத்தப்படாது, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் எந்தவித அனுமதிகளுமின்றி வாய்க்கால் அமைப்பதற்கென ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா 2,500 ரூபா வீதம் அறவிடப்பட்டிருப்பதாக விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தெடர்பில் பரந்தன் கமநல சேவைநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு வினவியபோது, கோரக்கன் கட்டுப்பகுதியில் இவ்வாண்டுக்கான சிறு போகச் செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

எந்த தீர்மானங்களுமின்றி பற்றுச்சீட்டுகள் இல்லாது விவசாயிகளிடமிருந்து பணம் அறவிடப்பட்டிருந்தால் அது ஒரு சட்டவிரோதமான செயற்பாடாகும்.

இது தொடர்பாக விவசாயிகள் முறைப்பாடு தெரிவிக்கும் இடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தாங்கள் தயார் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இப் பிரதேசத்தில் சிறு போகச் செய்கை மேற்கொள்வதற்கான எந்த தகவல்களும் எங்களுக்கு உத்தியோக பூர்வமாகக் கிடைக்கவில்லை.
அவ்வாறு கிடைக்கும்போதுதான் மானிய கொடுப்பனவுகள், பயிர் காப்புறுதிகள், ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் விவசாயிகளுடன் பிரதேச மட்ட கலந்துரையால்களை நடத்தி தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.



தமிழகத்தின் உதவிகளுக்கு மனோ கணேசன் பாராட்டு

தமிழக முதல்வர் இலங்கைக்கு வழங்கவுள்ள நிவாரண உதவிகள், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுக்கு வழிவகுக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய மனோ கணேசன், தமிழக முதல்வரின் நிவாரணத்தை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்திய வம்சாவளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 200 ஆவது வருட நிறைவை முன்னிட்டு தமது கட்சி ஒழுங்கு செய்துள்ள நிகழ்வுக்கு தமிழக முதல்வரை அழைப்பதற்குத் தாம் தயாராகி வருவதாகவும் மனோ கணேசன் கூறினார்.

*பணம் கறந்த கமக்கார அமைப்புக்கு வைத்த ஆப்பு*

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY