
posted 15th January 2023
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
கடந்த சனிக்கிழமை விஜயம் செய்த ஹக்கீம் முக்கிய பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கள நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில், பாலமுனை, இறக்காமம், அட்டாளைச்சேனை முதலான பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர், பிரதேச கட்சி மத்திய குழு முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இம்முறை வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கட்சியின் மரச்சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தலைவர் ஹக்கீம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)