
posted 20th August 2022
அமைப்புக்களின் தடை நீக்கத்தை இனவாதமாகப் பார்க்கப்படுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்- ப.ம, இரா.துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு பின்பு பயங்கரவாத அமைப்புக்கள் என நினைத்து இருந்த நிலையில், தற்சமயம் புதிய அரசு வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்களின் தடை நீக்கத்தையும், வடக்கு கிழக்குக்கான உதவிகளையும் அறிவித்தல் விடுத்த நிலையில் சில சிங்கள அமைப்புக்கள் இதை எதிர்ப்பதென்பது தமிழர்களை இந் நாட்டின் பிரஜைகள் அல்ல என மீண்டும் மீண்டும் சிங்கள இனவாதம் வலியுறுத்துவதற்கு சமனாகும்.
வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் கல்வி, தொழில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளுக்காகவே சென்றவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என்பதை இனவாதிகள் மறந்து விட்டு பல இனவாதிகள் பேசுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். அங்கு சென்றவர்கள் அநேகமானவர்கள் நிர்ப்பந்தம் காரணமாகவே இங்கு அனைத்ததையும் இழந்து சென்றுள்ளார்கள்.
அங்கு சென்றவர்கள் பலர் தனி நபராகவும், கூட்டாகவும், குடும்பங்களாகவும் இலங்கையில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளைச் செய்து வருகின்றனர். இச் செயற்பாடானது பாராட்டக்கூடியது, கௌரவத்திற்கு உரியதுமாகும். இச் செயற்பாடுகளுக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.
குறிப்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பிலிருந்தும் சென்றவர்கள் கூட பல ஆண்டு காலமாக தனிநபராகவும், அமைப்பு ரீதியாகவும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல அமைப்பைச் சார்ந்தவர்களும், நலன்விரும்பிகளும்,பொதுமக்களும் தனிநபர்களும் மனம் கோணாமல் எம்மவர்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்சமயம் அரசாங்கத்தால் முன் வைக்கப்பட்டுள்ள தடை நீக்கத்தை புலம் பெயர் தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது சமூகத்தை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதற்கு உழைக்குமாறு கோருகின்றேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY