
posted 10th May 2022
அவசர காலச் சட்டத்தை அறிவித்து மக்களின் ஜனநாயக உரிமைக்கு வேட்டு வைத்துள்ளார் ஜனாதிபதி
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் உட்பட குடும்பத்தார் அனைவரையும் இராஜினாமா செய்யுங்கள் என ஒருமாத காலமாக ஜனநாயக முறைப்படி எந்தவித வன்முறையும் இல்லாமல் மனித உரிமை எதையும் மீறாமல் நாடு பூராகவும் வெகுஜனரீதியான போராட்டங்களை ஒரு காலமும் இல்லாதவாறு மூவின சமூகங்களும் தனிநபராகவும், அமைப்பு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் போராட்டங்களை நடாத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
ஒரு மாதகாலமாகியும் மக்களின் துன்ப துயரங்களுக்கு ஒரு முடிவின்றி மக்கள் பரிதவிக்கின்ற நிலையில் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்கு ஆட்சியாளர்கள் தவறு விட்டமை காரணமாக ஆட்சியாளர்கள் ஓதுங்கி மக்களின் துயர்களை துடைக்கக் கூடியவர்களின் கையில் செயல்திட்டங்களை அமுல்படுத்த வழி விடுமாறு
மக்கள் வீதிக்கு இறங்கிய நிலையில் ஜனாதிபதி அவர்கள் அவசர காலச் சட்டத்தை குறிப்பிட்ட காலங்கள் வரையும் பிரகடணப்படுத்தி உள்ளது என்பது மக்களின் ஜனநாயக குரலை ஓடுக்குவதோடு, பொலிசாரின் தனிச்சையான போக்குக்களையும், அரசபடையின் கண் மூடித்தனமான செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் சர்வதிகார ஆட்சியையும் திணிக்கும் செயலே.
இதை தடுத்து நிறுத்த மக்கள் அணிதிரளாத பட்சத்தில் வீடுவீடாகச் சென்று காணாமலாக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடரும்.
எனவே இதைத் தடுத்து நிறுத்த மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY