
posted 27th May 2022

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நடேஸ் - பிரியா மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்துக்குத் திரும்புவதற்கான நான்கு ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் புதிய தொழிற்கட்சி அரசாங்கம் நடேஸ் - பிரியா குடும்பத்துக்கு விசா வழங்கியது. இதன்மூலம் அவர்கள் தற்காலிகமாக பிலோலாவில் வசிக்கவும் வேலை செய்யவும் வழியேற்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் குடும்பம் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தலுக் கெதிராக நீண்ட சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த நடேஸ் -பிரியா குடும்பத்தினர் பிலோலா சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார்.
தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் பிலோலாவில் பிரிட்ஜிங் விசாவில் வாழ்வதற்கு அனுமதிப்பதாக ஜிம் சால்மர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது குடியமர்வு நிலைமை தொடர்பில் அவுஸ்திரேலிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆராயப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் பிலோலா பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டு வந்தது.
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரியா-நடேஸ் குடும்பம் பிலோலாவில் வாழ அனுமதிக்கப்படுவர் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய ஹோம் ரூ பிலோ அங்கத்தவர்கள் கோரியிருந்த பின்னணியில் அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது பேர்த்தில் சமூகத்தடுப்பில் வாழ்ந்துவரும் இக்குடும்பம் விரைவில் பிலோலா புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY