
posted 11th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் சிறுவர் சந்தை
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் இன்று (10) சிறுவர் சந்தை இடம்பெற்றது
பாடசாலையின் அதிபர் தலைமையில் புதன் அன்று (10) காலை ஆரம்பமான சிறுவர் சந்தையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி,வியாபார நுணுக்கங்கள் என்பனவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலையின் மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை பெற்றோரும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
குறித்த மாதிரி சந்தை மாணவர்களின் தனி ஆளுமை விருத்தியை வெளிக் கொண்டுவரும் வகையில் காணக்கூடியதாக இச் சந்தை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)