விவசாயத்தில் தன்னிறைவு காண்பதே பொருளாதார தன்னிறைவுக்கு வழிகோலும். அமைச்சர் காதர் மஸ்தான்

சகல வளங்களையும் கொண்ட எமது நாட்டில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் விடுவிப்தற்கான நடவடிக்கையாக விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (28.10.2022) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை மன்னார் மாவட்டத்தில் மடு . நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்

அத்துடன் பாலமடு மற்றும் உயிலங்குளம் ஆகிய கமத்தொழில் திணைக்கங்களுக்கும் விஐயங்களை மேற்கொண்ட கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான விதைப்பதற்கு ஏற்ற உப உணவு விதைகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்டத்திற்கு 8.7 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட;;டில் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி தெரிவு செய்யப்பட்ட சுமார் 850 பயனாளிகளுக்கான விதைப்பதற்கு உகந்த உழுந்து மற்றும் பயறு ஆகிய தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிகழ்வுகளின்போது. கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உரையாற்றுகையில் நாட்டின் பொருளாதாரம் மேலோங்க வேண்டுமெனில் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

விவசாயத்தை மேன்மைப்படுத்துகின்ற உலக நாடுகள் இன்று நவீன விவசாய முறைகளை கையாண்டு குறைந்த மூலதனத்துடன் கூடிய விளைச்சலைப் பெறுகின்றன.

அதேபோல எமது நாடும் நவீன விவசாய முறையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். எமது நாடானது முற்றிலும் விவசாயத்திற்கு உகந்த ஒரு நாடாகும்.

சகல இயற்கை வளங்களையும் விவசாயத்திற்கான சாதகமான காலநிலையையும் கொண்டுள்ளது. இது எமது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற ஒரு பெரிய கொடையாகும்.

எனவே விவசாயம் நல்லதொரு நிலையை அடையும் போது எமது நாட்டின் பொருளாதாரம் தன்னிறைவை எட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் விவசாய திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தில் தன்னிறைவு காண்பதே பொருளாதார தன்னிறைவுக்கு வழிகோலும். அமைச்சர் காதர் மஸ்தான்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More