விழிப்புணர்வுக்  கருத்தரங்கு

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கான தற்சார்பு பொருளாதாரம் தொடர்பாகவும், போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாகவும் கருத்தரங்கு ஒன்று இன்று வியாழன்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தெங்கு அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் 200 தென்னங்கன்றுகளும், மரக்கறி விதைப் பொதிகளும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இளவாலை சர்வமத ஆன்மீக அறக்கட்டளையின் போசகர் அருட்தந்தை சி.ஜி. ஜெயக்குமார் அடிகள், தெங்கு அபிவிருத்திச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ். வைகுந்தன், ஓய்வு நிலை அதிபர் ஸ்ரீ காந்தன், தமிழர் சக்தி அமைப்பின் பிரதானி ரவிமயூரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்த நிகழ்வில் இரு மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாக தலா ரூபா 10,000 வழங்கப்பட்டதுடன் உரும்பிராய் கற்பக விநாயகர் கலாசார மண்டபத்தினரால் திருக்குறள் நூல்களும் பாடசாலை நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

யாழ். இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர் அமரர் சோமசேகரசுந்தரம் நினைவாக அவரது மாணவர் ஒருவர் இதற்கான நிதியுதவிகளை வழங்கினார்.

விழிப்புணர்வுக்  கருத்தரங்கு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More