விளையாட்டும், கலையும் இளைஞர்களின் இலக்கைத் தாண்டாவிடாது

விளையாட்டு மற்றும் கலையை நாம் ஊக்குவிக்கின்றபோது அநாவசியமான செயல்பாடுகள் எமது இளைஞர் யுவதிகளிடம் அடக்கப்படும்.
அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார்

விளையாட்டு மற்றும் கலையை நாம் ஊக்குவிக்கின்றபோது, அநாவசியமான செயல்பாடுகள் எமது இளைஞர் யுவதிகளிடம் அடக்கப்பட்டு, அவர்களின் வாழ்வுக்கு தேவையான மனநெகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரும் பேசாலை பங்கு தந்தையுமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.

அகில உலக பூ பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம்பெற்ற பேசாலையை சார்ந்தவரும், பேசாலை மன் பத்திமா தேசிய பாடசாலை மாணவனுமாகிய ததேயு சில்வியன் டலிமாவுக்கு பேசாலை விழிகள் கலா முற்றம் ஞாயிற்றுக் கிழமை (13.03.2022) கௌரவிப்பு விழாவை நடர்த்தியபோது மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரும் பேசாலை பங்கு தந்தையுமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தொடர்ந்து அவர் இங்கு உரையாற்றுகையில்;

பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு செய்யும் பெரிய உதவி என்னவென்றால் அவையத்தில் அறிஞர்கள் மத்தியில் அவன் வீற்றிருக்கும் செயல்தான் அது பெரிய செயலாகும்.

இதுபோன்று பிள்ளை பெற்றோருக்கு ஆற்றும் உதவி என்னவென்றால், வழியிலே அந்த பிள்ளை நடந்து செல்லும்போது மற்றைய பெற்றோர்கள் அவனைப் பார்த்து இவனை பெற்றெடுத்த பெற்றோர் எவ்வளவுக்கு மதிப்புக்குரியவர்கள் என அவர்கள் எண்ண வேண்டுமாம்.

மன்னார் மாவட்டத்தை நாம் பெருமையுடன் நோக்க வேண்டும். இந்த நிலையில் அண்மையில் கால்பந்தாட்ட வீரன் டக்ஸன் பியூஸ்லஸ் எம்மைவிட்டு மறைந்தது எமக்கு ஒரு பெரும் துன்பம்.

எமது பேசாலை பங்கிலிருந்து ஒரு பையன் தேசிய ரீதியில் மாத்திரமல்ல, இந்த சில்வியன் என்ற மாணவன் விளையாட்டுத் துறையில் உலகலாவிய ரீதியில் தனது பெயரை பதிவு செய்துள்ளான்.

உண்மையில், எமது மன்னார் மாவட்டம் ஒரு வரப்பிரசாதம் பெற்ற மாவட்டமாகும். இதன் வெளிப்பாடே தற்பொழுது வெளிப்படுகின்றது.

பேசாலை கிராமம் எல்லாவித ஆசீர்வாதத்தால் நிரம்பியுள்ளது. இதற்கு நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். பேசாலையில் ஒரு குறைமட்டும் காணப்பட்டது. எதுவாக இருந்தாலும் தேசிய மட்டத்துடன் அது நின்று விடுகின்றதோ என்பதுதான்.

ஆனால் இப்பொழுது அதுவும் இந்த சில்வியன் டலிமா என்ற மாணவனால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் கல்வியிலும் விளையாட்டுத் துறைகளிலும் பல சாதனைகள் புரிந்து வருவதுமட்டுமல்ல, மன்னார் மாவட்டம் இறை விசுவாசத்திலும் வீரத்திலும் திகழும் மாவட்டமாகும்.

இந்த நிலையில்தான் பேசாலை கிராமம் இன்னொரு மைல் கல்லை எட்டியுள்ளது எனலாம். இதற்கெல்லாம் இவரின் பெற்றோர், இவருக்கு வழிகாட்டிய பாடசாலை அதிபர்கள் பயிற்றுவித்த ஆசிரியர்கள், ஊக்குவித்தவர்களுக்கு நாம் நன்றிகூறி நிற்கின்றோம்.

சமூக சீர்கேடுகள் தற்பொழுது சமகாலத்தில் பல இடங்களிலும் நிலவி வருகின்றபோதும் இவ்வாறான விளையாட்டு மற்றும் கலையை நாம் ஊக்குவிக்கின்றபோது அநாவசியமான செயல்பாடுகள் எமது இளைஞர், யுவதிகளிடம் அடக்கப்பட்டு அவர்களின் வாழ்வுக்கு தேவையான மனநெகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன என தெரிவித்தார்.

விளையாட்டும், கலையும் இளைஞர்களின் இலக்கைத் தாண்டாவிடாது

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House