
posted 8th May 2022
கிளிநொச்சி சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திற்குரிய காணியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பிரதேச மக்கள் தாளையடி - புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கிளிநொச்சி சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவர் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து குறித்த விளையாட்டு மைதானத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பில் விசாரணை நடத்தியபோதே காணி விற்பனை செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
பாடசாலைக்குரிய விளையாட்டு மைதானம் பாடசாலைக்குரியதாக உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து தாளையடி - புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY