
posted 10th May 2022
சமையல் எரிவாயுவுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாகப் பொது மக்கள் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகிவருகின்றனர்.
நாட்டின் வங்குரோத்து நிலமை, தூரநோக்கற்ற திட்டமிடல்கள், சீரற்ற நிருவாகம் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கொழும்பு போன்ற நகரங்களில் வாழும் மக்கள் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக வீதிக்கு இறங்கிப் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும், குறிப்பாக கிராமப் புறங்களிலும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தி தேனீர்க்கடைகள், சிறிய உணவகங்களை நடத்தி அன்றாட வருமானம் பெற்று வந்த பலர், எரிவாயு தட்டுப்பாடு காரணமாகத்தமது கடைகளை மூடிவிட்டு தொழில் இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சமையலுக்கென மண்ணெண்ணை அடுப்புக்களைப் பயன்படுத்த முனைந்துள்ள மக்கள் அதன் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட கியூ வரிசைகளில் தவம் கிடக்க வேண்டிய நிலையுமுள்ளது.
இந்த அவலங்கள் காரணமாகத் தற்பொழுது பலர் பழைய முறைப்படி விறகு அடுப்பகளை சமையலுக்காகப் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக பிரபல உணவகங்கள் உட்பட பொது மக்களும் வீடுகளில் விறகு அடுப்புக்கள் மூலம் சமையல் வேலைகள் செய்யத் தொடங்கியுள்ளதால் பல பிரதேசங்களிலும் விறகுக்குப் பெரும் கிராக்கியும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தினமும் காடுகளுக்குச் சென்று விறகுகளை வெட்டி, பிரதேசங்களுக்கு எடுத்துவந்து விற்பனை செய்வோரின் வருமானம் தற்சமயம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மரம் அரியும் ஆலைகளில் கிடைக்கப்பெறும் மரத்தூள்கள், மற்றும் மரக் கழிவு துண்டுகளும் பெரும் கிராக்கியுடனும் கூடிய கட்டணங்களுடனும் விற்பனையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மக்களின் இன்றைய அவல வாழ்க்கைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டேதான்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY