
posted 26th March 2022

எம் ஏ எப் நஸீறா
24.03.2022 அன்று, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், நூலகர் எம் எம் றிபாயுதீனின் தலைமையிலும், தமிழ் சிறப்புத் தேர்ச்சி (இறுதி ஆண்டு) மாணவி, எம் ஏ எப் நஸீறாவின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரை நினைவு கூர்ந்த கௌரவமளிப்பு விழாவில், அடிகளாரின் யாழ்நூல் பற்றியும், அவரது வரலாறு பற்றியும் சிறந்த ஆய்வுடன் கூடிய முக்கிய உரை ஒன்றை ஆற்றிய நஸீறாவின் உரை இங்கு பதிவாகத் தரப்பட்டுள்ளது.
அவ்விழாவில் நஸீறா, அடிகளாரின் யாழ்நூல் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையும், அதிலே, அடிகளாரின் வரலாறையும், அடிகளார் தமிழின்மேல் வைத்த பற்றையும், தமிழினம் இவ்வுலகில் வாழ்வதற்குரிய முக்கியத்தின் அத்தியாவசியத்தையும், அதற்கு அடிகளாருக்கு ஏற்பட்ட அவசியத்தையும், ஆர்வத்தையும், அவரை பல்கலைப் பேரறிஞராக பிரகாசித்துக் காட்டு வதையும் எடுத்துக்காட்டுகின்றார்
எமது தமிழ் சமூகத்திலே, அதுவும் கிழக்கு மாகாணத்திலே காரைதீவில் பிறந்து வளர்ந்த அடிகளார், எம்மினம் பிறந்ததன், வாழ்வதன் அர்த்தத்தை உலகிற்கே உணர வைத்த பேரறிஞர் என்று சொல்வதில் பெருமையடைய வேண்டுமென்று இம்மாணவி எடுத்தியம்புகின்றார்.
அவரது பெருமைமிக்க ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, எமது தமிழ் கலாசாரத்தை மேலும் உலகிலேயே உயரத்திக் காட்டும் அளவிற்கு வாழ்ந்து காட்டிய அக்கல்விமானுடைய வரலாறை கருபிசகாமல் நஸீறா தனது கட்டுரையில் அழகாக எடுத்தியம்பியிருக்கின்றார்.
நஸீறாவின் ஆணித்தரமான, கருத்துகள் கொண்ட உரையை கீழேயுள்ள இணைப்பில் வாசித்து அறியுங்கள்.
இங்கே கிளிக் செய்யுங்கள் >>>> விபுலாந்தரும் யாழ்நூலும்

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House