
posted 25th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
விபத்தில் அகப்பட்ட போட்டிக்கு ஓடிய பயணிகள் வாகனங்கள்
பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் சிற்றூர்தியும் (மினிபஸ்) ஹைஏஸ் வாகனமும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
கொடிகாமம் நகருக்கு யாழ். - கண்டி (ஏ - 9) நெடுஞ்சாலையில் இன்று (25) ஞாயிறு மதியம் 12.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் சிற்றூர்தியும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஹைஏஸ் வாகனமும் பயணித்தன. வேகமாக சென்ற தனியார் சிற்றூர்தி, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டது. அப்போது எதிர்த்திசை மார்க்கமாக வந்த ஹைஏஸ் வாகனத்துடன் மோதியது.
இதில், தடம்புரண்ட தனியார் சிற்றூர்தி சுமார் 100 அடிக்கும் அதிகமான தூரம் இழுபட்டு சென்றது. இதன்போது பேருந்தில் சுமார் 40 பேர் இருந்தனர். இவர்களில் 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் மாணவர்களும் சிற்றூர்தியின் சாரதியும் அடங்குவர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)