
posted 26th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
விசேட பிரார்த்தனை
சுகயீனமுற்றிருக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மருதமுனையைச் சேர்ந்த பீ.எம்.எம்.ஏ.காதர் சுகம்பெற வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று மருதமுறையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தலைவர் மீரா.எஸ். இஸ்ஸடீன் தலைமையில் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இந்த பிரார்த்தனை வைபவம் இடம்பெற்றது.
மேற்படி ஜும்ஆப் பள்ளிவாசல் பேஸ் இமாம் அல்-ஹாபிஸ் மௌலவி ஏ.ஆர்.எம். ஜரீர் இந்நிகழ்வின் போது விசேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார்.
இதேவேளை இந்த பிரார்த்தனை நிகழ்வில் இஸ்ரேல் காஷா யுத்தத்தில் உயிர் நீத்துள்ள ஊடகவியலாளர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காகவும் தனியே விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் சம்மேளனத்தின் செயாலாளர் எம்.எம்.ஏ. சமட், சம்மேளன சிரேஷ்ட ஆலோசகர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம், ஆலோசகர் ஐ.எல்.எம். றிஸான் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)