வாளை வைத்து அயலவர்களை மிரட்டிய மாணவன்

கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் வாளை வைத்திருந்தவாறு அயலவர்களை மிரட்டியதுடன், வீட்டின் மீது கற்களை எறிந்தும் கதவுகளை உடைத்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு முள்ளியானில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

இளைஞரால் தாக்கப்பட்ட வீட்டில் வயோதிப பெண் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை அங்கு சென்றவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அந்தப் பெண் அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இவ்வாறு வந்தவர்களையே அந்த இளைஞர் வாளை வைத்திருந்தவாறு மிரட்டியுள்ளார்.

இரு குடும்பங்களிடையே நிலவிய முரண்பாடு நேற்று முன்தினம் முற்றிய நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாளை வைத்து அயலவர்களை மிரட்டிய மாணவன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More