
posted 6th May 2022
வவுனியாவில் போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்கள், மொத்த மரக்கறி விற்பனையகம், தபாலகம், வங்கிகள், அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அத்துடன், தனியார் பஸ் சேவை, முச்சக்கர வண்டிகள் என்பனவும் சேவையில் ஈடுபடாமையால் போக்குவரத்து சேவையும் பாதிப்படைந்தன.
இருப்பினும் வீதிகளில் மக்களின் நடமாட்டத்தை குறைந்தளவில் அவதானிக்க முடிந்தது.
யாழில் நடந்தேறிய அரசுக் கெதிரான கர்த்தால்;

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)