
posted 10th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹைஏஸ் வாகனத்தில் மாடு கடத்தல்
வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹைஏஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹைஏஸ் வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில் குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர்.
மாடுகளுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதால் குறித்த வாகனத்தை வாகன திருத்தும் இடம் ஒன்றில் நிறுத்தி விட்டு இரு மாடுகளையும் இறைச்சிக்காக விற்றுள்ளனர்.
மாடு கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
மாடுகளை கடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், விபத்துக்குள்ளான வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)