
posted 15th January 2023

வரலாற்று சிறப்புமிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சிறப்பு பொங்கல் பூசைகள் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் சிறப்பாக இடம் பெற்றன.
வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதி ஈஸ்வர குருக்கள் தலைமையிலான குருமார்களால் காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பூசைகளாக ஓம வளர்த்து பின்னர் சவசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார் உள்வீதி வலம் வந்து பூசைகள் நிறைவடைந்த பின்னர் சரியாக நல்ல நேரமாக எட்டு மணிக்கு பொங்கல் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய இந்த சிறப்பு தைப்பொங்கல் வழிபாட்டிலே வல்லிபுர ஆழ்வார் அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)