வலுவூட்டல் செயலமர்வு

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நிருவாகத்தினை வினைத்திறன்மிக்கதாக மாற்ற மாகாண கல்வித் திணைக்களம் பல்வேறு வலுவூட்டல் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது .

மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் வழிகாட்டுதலில் வலயக்கல்விப் பணிப்பாளர்களின் மேற்பார்வையில் இந்த வலுவூட்டல் பயிற்சிகள் தற்பொழுது நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இப்பயிற்சிகள் ஊடாக நிர்வாகம், நிதிமுகாமைத்துவம், ஆளணி முகாமைத்துவம் , உளவள ஆலோசனை மேம்பாடு, சத்துணவு அபிவிருத்தி உட்பட பல்வேறு துறைகளில், அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வலுவூட்டல் பயிற்சிகள் வழங்கப்பட எதிர்பார்க்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி பிள்ளநாயகம் தெரிவித்தார்.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 65 பாடசாலைகளில் அதிபர்களுக்கான விசேட வலுவூட்டல் பயிற்சிநெறி கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று தினங்களாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது .

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வித் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன .

இந்த வலுவூட்டல் பயிற்சிகளை பூர்த்தி செய்த பாடசாலை அதிபர்களுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளநாயகம் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

வலுவூட்டல் செயலமர்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY