
posted 11th May 2022
நாட்டு மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் மதிக்காது தொடர்ச்சியாக செயற்பட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கு வலுசேர்க்கும் விதத்தில் செயற்பட்டவர்கள் இனியாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்து, மதித்து செயற்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியுமான ஹூனைஸ் பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நாட்டின் சூழ்நிலையை கவனத்துக்கொள்ள வேண்டுமென ஹூனைஸ் பாறூக் வன்னி மக்களுக்கு ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று நாடானது அசாதாரண சூழ்நிலைக்கும் பதற்றமான நிலைக்கும் ஆளாகியுள்ளது.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபடாது பொறுமையாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் நாட்டின் சட்டத்தை மதித்து மனிதாபிமானம் ஆக செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மிகவும் அமைதியான முறையில் காலிமுகத்திடலில் நாட்டு மக்களின் உரிமைக்காக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது அடியாட்களையும், குண்டர்களையும் பயன்படுத்தி மிலேச்சத்தனமான வன்முறை தாக்குதலை ஆளும் தரப்பு மேற்கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
குறித்த வன்முறை சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்கள் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும் தெரிவிப்பதாவது, நாட்டு மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் மதிக்காது தொடர்ச்சியாக செயற்பட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கு வலுசேர்க்கும் விதத்தில் செயற்பட்டவர்கள் இனியாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்து மதித்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY