
posted 4th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் போலீஸ், இராணுவம் சுற்றி வளைப்பு
யாழ்ப்பாணம் வடவராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று வியாழக்கிழமை (04) அதிகாலையிலிருந்து மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மருதங்கேணி போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என்றும் குறிப்பாக வாள் வெட்டில் ஈடுபடுதல், மக்களை மிரட்டுதல், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போலீஸ் மற்றும் இராணுவத்தினர் 40 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளாக நடவடிக்கைக்கு முற்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை நேற்று பிற்பகல் குடத்தனை வடக்கு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் மாலை ஆறு மணிமுதல் திருவிழா இடம் பெற்றுள்ளதுடன் இரவு பத்துமணியிலிருந்து இசைக்கச்சேரி இடம் பெற்றுள்ளது. அங்கு இடம் பெற்ற வன்முறைகளில் மகேந்திரா ரக வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அவ் வாகனம் பகுதியளவில் சேதமடைந்தததாகவும், இசை நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)