லோங் கோவிட் (Long Covid) என்றால் என்ன?

இரண்டு வருடங்களாக உலகமே கோவிடின் இரும்புப் பிடியினுள் அகப்பட்டு, தவித்து, பல உயிர்களைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கையிலே, மீண்டும் அந்தக் கொடூர வைரஸ் நோயானது மாறுபட்டு உலத்திற்கே ஒரு சவால் விடும் எதிரியாக முன் வரத்தொடங்கியுள்ளது.

அந்த நோயினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் மாறவில்லை. மறையவுமில்லை. கொஞ்சம் மூச்சு விட்டு சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் அதே கட்டுப்பாடுகள் அதிகாரிகளால் போடப்படுகின்றன.

தடுப்பூசிகள் போடப்பட்டும் பலன் பூரணமாக்க கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் ஒருபக்கம். இதனையும் தாண்டி, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தானோருக்கு அவர்களது உடலிலே சிறு சிறு வித்தியாசங்களை உணரக்கூடியதான சுகயீனங்கள்.

சிலர் தமக்கே என்னவென்று புரியாத உடல் அலுப்பு, பெலவீனம், நித்திரைக் குளப்பம் என்று சொல்லுவதும், இவையெல்லாம் எமக்கு முன்பு இருக்கவில்லை எனவும், இந்தத் தடுப்பூசிகளைப் போட்ட பின்புதான் இவையெல்லாம் வந்தன என்ற ஒரு விரக்தியான வாழ்க்கை. முக்கியமாக, இந்த மூன்றாவது தடுப்பூசியின் பின்புதான் என அவர்களது முடிவுகளுடன் வாழுகையிலே, இந்த ஊசிகளின் விளைவுகளாகவே அவை அமைகின்றன என்று நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த அறிகுறிகள்தான் லோங் கோவிட் (Long Covid) க்குரிய அறிகுறிகள் என்று சொல்லப்படுகின்றது.

உலக சுகாதார ஸ்தாபன (World Health Organisation)த்தின் கணக்குப்படி, 10 தொடக்கம் 20 சதவீதமானோருக்கு கோவிட்-19 நோய் வந்ததிலிருந்து குறைந்தது இரண்டு மாதங்களின் பின்பு இந்த அறிகுறிகள் தோன்றினால் இந் நிகழ்வினை லோங் கோவிட் என்று சொல்லப்படும்.

இதன் அறிகுறிகளாவன;

  • பெலவீனம்
  • மூச்சு விடவதில் கஷ்டம்
  • நித்திரையின்மை
  • கவலை மற்றும் மனச்சோர்வு
  • வாசனை அல்லது ருசி இல்லாமலிருப்பது
  • நெஞ்சு நோவு
  • ஞாபகசக்தியில் தாக்கம்

என்பனவாகும்








Ref:thebmj |16 July 2022

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More