
posted 29th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
லொறி - ரயில் விபத்து
தம்புள்ளையில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி முருங்கன் ரயில் கடவையில் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)