லொறி தீக்கிரை

வனவளத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த லொறி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டில் உள்ள மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட லொறி ஒன்று கைப்பற்றபட்டு தடுத்து வைக்கப்பட்டது.

இந்த கைது கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் பூநகரி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் (15) ஞாயிற்றுக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்றபோது வனஜீவராசிகள் அலுவலகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நீர்த்தாங்கி மூலம் தீயை அணைத்தனர் எனவும் கூறப்பட்டது. ஆயினும் வாகனம் முற்றாக எரிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

துயர் பகிர்வோம்

லொறி தீக்கிரை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More