
posted 9th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
லண்டன் செல்கிறார் திருமலை மாணவன்
திருகோணமலை இராம கிருஷ்ணமிஷன் சிறீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் கஜச்செல்வன் அஷ்வின் லண்டனில் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தரம் - 6 இல் கல்வி கற்ற போது கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று லண்டன் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்தவகையில் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் லண்டனில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் தேசிய மட்டத்தில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு - 2 இல் இரண்டாம் இடத்தைப்பெற்று இந்தியாவின் லக்னோ நகரில் 25. 07. 2024 தொடக்கம் 01. 08. 2024 காலப் பகுதியில் நடைபெறும் சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கை சார்பாக பங்கேற்கும் 12 பேர் கொண்ட குழுவிலும் மாணவன் அஷ்வின் பங்குபற்றவுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)