
posted 11th May 2022
இலங்கை ராஜபக்ஷக்களுக்கு சொந்தமான பரம்பரை வீடும் நேற்றிரவு திங்கட்கிழமை அடித்து நொறுக்கப்பட்டதுடன், தீயிட்டு எரிக்கப்பட்டது.
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய - மெதமுலனையிலுள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களே இந்த வீட்டை தீயிட்டு எரித்தனர் என்று கூறப்படுகின்றது.
முன்னதாக மெதமுலன சந்தியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஆட்சியாளர்களின் தந்தையுமான டி. ஏ. ராஜபக்ஷவின் சிலையும் இடிக்கப்பட்டது. அத்துடன், ராஜபக்ஷ தம்பதியரின் நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டிருந்த நூதனசாலையும் அடித்து நொருக்கப்பட்டது.
இதேசமயம், நேற்றிரவு திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான குருநாகல் வீடும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த வீடுகள் தவிர, ஆளும் கட்சியைச் சேர்ந்த பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, டி.பி . சன்ன ஜயசுமண, மஹிபால ஹேரத், ரமேஷ் பத்திரண, திஸ்ஸ குட்டியாராச்சி , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , சாந்த பண்டார , அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் அவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் என்பனவும் தீயிட்டு எரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY