
posted 16th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ரணிலுக்கு நரேஎந்திர மோடி அழுத்தம் வழங்கவேண்டும்!
“தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு தீர்வாக இந்தியாவின் தலையீட்டில் 1987ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
முன்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வாறான ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு அதனை இந்திய பிரதமர் மோடிக்கு நாம் சேர்ந்து அனுப்பியிருந்தோம்.
தற்போது தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாமல் மறுத்தமைக்கு காரணம், அரசியல் என்று நான் நம்புகிறேன். கூடிய ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்ட தாங்கள் மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பது அரசியல் ரீதியாகத் தம்மைப் பாதிக்கக்கூடும் என்று நினைத்திருக்கலாம்.
இக்கடிதத்தை மற்றைய கட்சிகளே முன்னின்று தயாரித்தன. ஆகவே, அவர்கள் கூறி நாங்கள் எந்தவகையில் கையெழுத்திட முடியும் என்ற ஒருவித அகந்தை சம்பந்திடம் குடிகொண்டிருக்கலாம். ஆனால், கையெழுத்திடாமைக்குக் கூறப்பட்ட காரணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தொன்றல்ல.
மக்கள் வாக்குகள் 13 இற்கு தரப்படவில்லை என்றால் எவ்வாறு முன்னைய கடிதத்தில் சம்பந்தன் கையெழுத்திட்டார் என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தம்மையும் தம்மைச் சுற்றியுள்ளவர்கள் நலனையும் மட்டுமே முன்வைத்து தான் முடிவெடுப்பார்கள்.
தீர்மானங்கள் எடுக்கப்படும் போது தமிழர்களின் எதிர்காலம் பற்றி அவ்வளவாக கருத்திற்கொள்வதில்லை. அதனால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தற்போது இந்த நிலை வந்துள்ளது. அது தனித்துப்போயுள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)