
posted 22nd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யுவதி மீது தாக்குதல் - இரு பெண்கள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த யுவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுளு்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவுநீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அயலவர்கள் இருவரிடையே முரண்பாடு ஏற்பட்டுது.
இது தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (19) கழிவுநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அயல் வீட்டுக்குள் சென்றுள்ளது. இது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் அயல் வீட்டாருடன் முரண்பட்டுள்ளார். இதன்போது, கழிவுநீரை வெளியேற்றிய வீட்டை சேர்ந்த இரு பெண்கள் அந்த யுவதியை தாக்கியுள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)