
posted 14th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யுனெஸ்கோ தலைவர் இலங்கை வருகிறார்
ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) தலைவர் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை வருகிறார்.
அரசின் அழைப்பில் நாட்டுக்கு வருகை தரும் யுனெஸ்கோ தலைவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இந்தக் காலப்பகுதியில், யுனெஸ்கோவில் இலங்கை இணைந்த 75 ஆண்டுகள் நிறைவு விழாவிலும் பங்கேற்பார். அத்துடன், யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களையும் அவர் பார்வையிடுவார்.
இதன்போது அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)