
posted 30th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். போதனாவில் அவசர சிகிச்சை பிரிவின் 5ஆம் ஆண்டு நிறைவுவிழா
யாழ். போதனா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் ஐந்தாம் வருட விழா நிறைவு நிகழ்வு நேற்று (29) புதன் கொண்டாப்பட்டது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்டதை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மருத்துவ சங்கத் தலைவர் சுதர்சன், அரச மருத்துவ சங்கத்தின் உப தலைவர் சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். மதிவாணன், மருத்துவ நிபுணர்கள், தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் மற்றும் தாதியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)