யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கெதிராக நடத்தப்பட்ட பேரணி

நாட்டில் எழுந்துள்ள பெரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகவேண்டும் எனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திங்கட்கிழமை பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் நேற்றுக் காலை அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழக முன்பாக ஆரம்பமான பேரணி, பல மாணவர்களின் பங்கேற்போடு யாழ். நகரை நோக்கிச் சென்றது.

பலாலி வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து, அங்கிருந்து யாழ். மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது, பஸ் நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து, கஸ்தூரியார் வீதியூடாக, ஸ்ரான்லி வீதியை அடைந்து அங்கிருந்து ஆரியகுளம் சந்தியை அடைந்து மீண்டும் பலாலி வீதியூடாக பல்கலைக்கழகத்தை சென்றடைந்தது.

மாணவர்கள் பேரணியாக ஸ்ரான்லி வீதியூடாக செல்லும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் முன்பு சில நிமிடங்கள் தரித்து நின்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கெதிராக நடத்தப்பட்ட பேரணி

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More