
posted 11th November 2022
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம்மீது கண்ணாடி போத்தல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள தூதரகத்தின்மீது நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இனந்தெரியாதவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்தவர்கள் தூதரகத்தின் வாயிலில் கண்ணாடி போத்தலை வீசித் தாக்கிவிட்டு வேகமாக சென்றுள்ளனர் என்று அங்குள்ள கண்காணிப்பு கமெராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதுதொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)